Short News

மன்னிப்பு கேட்ட கமல்!

மன்னிப்பு கேட்ட கமல்!

இன்று காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் கொடி ஏற்றினார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன். இந்நிலையில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்ததால் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே போக்குவரத்து பாதிப்புக்கு பொதுமக்களிடம் கமல் மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் எரிந்த நிலையில் ஆண் சடலம்!

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் எரிந்த நிலையில் ஆண் சடலம்!

சென்னை, ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த முகமது சுல்தான் என்ற இளைஞர், அவரது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றினர். கதவு வெளியே பூட்டிய நிலையில் உள்ளே சுல்தான் சடலமாக கிடந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நாளை பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு!

நாளை பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு!

கார்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது. இதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாய பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது. நாளை காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை முதல்வர் ஈபிஎஸ் திறந்து விடுகிறார்.
ஸ்டாலின் தமிழகத்திற்கு வந்தார், மழை நின்றுவிட்டது- ஈபிஎஸ்!
<iframe width="505" height="285" src="https://www.youtube.com/embed/cAi2QtK-Fdo" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

ஸ்டாலின் தமிழகத்திற்கு வந்தார், மழை நின்றுவிட்டது- ஈபிஎஸ்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பொழிந்து தமிழகத்தில் அணைகள் நிரம்பியது, ஆனால் அவர் தமிழகத்துக்கு திரும்பி வந்ததும் மழை நின்றுவிட்டது, தமிழ்நாடு முழுவதும் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள், அப்படி பார்த்தால் யாருமே பணிபுரிய முடியாது" என்றார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more