Short News

மதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு!

மதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு!

நடிகர் கமலஹாசன் வரும் பிப். 21ம் தேதி முதல் நாளை நமதே எனும் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில், கமலஹாசனின் முதல் மாநாடு மதுரை அரசரடியில் நடைபெறவுள்ளது. அந்நாளில் கமலஹாசன் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தவுள்ளார். இது கமல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடகியாக அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை!

பாடகியாக அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை!

நடிகர் கார்த்திக் தனது மகன் கவுதமுடன் இணைந்து 'மிஸ்டர் சந்திரமௌலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம், முதன் முறையாக சூர்யாவின் தங்கை பிருந்தா பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை திரு இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் ரெஜினா கசான்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்களை எது பாதுகாக்கும்?

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்களை எது பாதுகாக்கும்?

நவீன கார்கள் பல மிக வேகமாக செல்லும் இன்ஜின் திறனுடன் உருவாக்கப்படுவதால் அந்த கார்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் அதிகம் தான்.கார் விபத்தில் சிக்கினால் காரில் உள்ளவர்கள் காயமின்றி தப்பிக்கவும், குறைவாகன காயங்கள் மட்டுமே ஏற்பட்டுவும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளை தாக்கல் செய்ய உத்தரவு!

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளை தாக்கல் செய்ய உத்தரவு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்போலோவிடம் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பலோ மருத்துவமனை நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மகள் என கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.