Short News

'காளி'  படத்தில் தனுஷ் ஹீரோ, சிம்பு வில்லன்!

'காளி' படத்தில் தனுஷ் ஹீரோ, சிம்பு வில்லன்!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய 'காளி' படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, "காளி கதையை ரெடி செய்த போது, எனது நண்பரான தனுஷிடம் முதலில் காளி கதையை சொன்னேன். உடனடியாக இந்த படத்தை தானே நடித்து தயாரிக்கவும் செய்வதாக கூறினார்.மேலும், இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க சிம்புவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் பல காரணங்களால் அவர்கள் இந்த படத்தில் நடக்கவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.
பா. ரஞ்சித் படத்தில் தளபதி விஜய்?

பா. ரஞ்சித் படத்தில் தளபதி விஜய்?

ரஞ்சித் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி ஆகிய படங்களை இயக்கியவர். அடுத்து இவர் இயக்கத்தில் காலா படம் வரவுள்ளது. இந்த பட ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இயக்குனர் கலந்துக்கொண்டார். அப்போது நீங்கள் அடுத்தப்படம் விஜய்யுடன் இணைந்து பணியாற்றப்போகிறீர்களா என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு தயாரிப்பாளர் நீங்கள் என்றால் ஓகே என ஜாலியாக கூறியுள்ளார். 
முரட்டுக்குத்து பாணியில் தமிழில் மற்றொரு படம்!

முரட்டுக்குத்து பாணியில் தமிழில் மற்றொரு படம்!

சர்ச்சை தலைப்புடன் சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனது. இந்நிலையில் அதே பாணியில் சர்ச்சை தலைப்புடன் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகின்றனர். படத்திற்கு "பல்லு படாம பாத்துக்க" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 
49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் லபாத்தில் சுமார் 49.20 சதவீத லாபத்தில் சரிவடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், இந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது