Short News

மம்முட்டியின் அதிக பட்ஜெட் படம் சூட்டிங் துவங்கியது!

மம்முட்டியின் அதிக பட்ஜெட் படம் சூட்டிங் துவங்கியது!

மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி மாமாங்கம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அவர் பழசிராஜா படத்தையடுத்து தற்போது மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ரூ.30 கோடி செலவில் உருவாகவுள்ளது. மம்முட்டி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் படப்பிடிப்பு மங்களூரில் இன்றுதொடங்கியுள்ளது 
அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணம் உலகம் முழுவதும் சர்வாதிகாரிகளை அதிகரிக்க செய்கிறது. இதற்கு இந்தியா முதல் மாலத்தீவுவரை உதாரண சின்னங்களாக இருக்கின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு மாலத்தீவு அதிபருக்கு ஐரோப்பியா நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி என்பதை புவனேஷ்வர்குமார் வெளிப்படுத்தியுள்ளார். வேகத்தை குறைத்து பந்துகளை வீசும்போது பேட்ஸ்மேன் ரன் குவிக்க திணறுவார். மேலும் அப்போது சரியான நீளத்தில் வீசப்படும் பந்துகள் அவர்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும். தொடர்ந்து இதனை கடைபிடிக்கும்போது விக்கெட்கள் சரிய வாய்ப்பு உள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை: அரசு திட்டம்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை: அரசு திட்டம்!

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஜியோ வந்த பிறகு சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க அதிரடி செலுகைகளை அறிவித்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளன.