Short News

டாப்லெஸ் உடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய டி.எஸ்.கே நடிகை!

டாப்லெஸ் உடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய டி.எஸ்.கே நடிகை!

தோட்டாக்கள் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீரா மிதுன். பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார். இந்நிலையில், இவர் தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நெட்டிசன்கள் இவரை விளாசியுள்ளனர். 
தொழில் போட்டியால் நிர்மலா தேவியை பழிவாங்குகிறார்கள்!

தொழில் போட்டியால் நிர்மலா தேவியை பழிவாங்குகிறார்கள்!

மதுரை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பேராசிரியை நிர்மலா தேவி கூறியதாக அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிறையில் முழுமையான பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார், மேலும், அருப்புக்கோட்டையில் கல்விநிறுவனங்கள் இடையேயான தொழில் போட்டியால் இந்த குற்றச்சாட்டை பெரிதாக்கியுள்ளனர். என்றும் அவர் பேசிய ஆடியோ முழுமையாக வெளியிடப்படவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
ரூ 30 கோடி மோசடி செய்த ஈஸிடீல் நிறுவனம்!

ரூ 30 கோடி மோசடி செய்த ஈஸிடீல் நிறுவனம்!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இ-காமர்ஸ் நிறுவனமான ஈஸிடீல் 250 பேரிடம் ரூ.30 கோடி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனம் ஆன்லைனில் ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில்,பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்வதாகக் கூறி ரூ.30 கோடி மோசடி செய்ததாக ஈஸிடீல் நிறுவனம் மீது இன்று சென்னை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
கொல்கத்தாவிற்கு வெற்றி இலக்கு 161 ரன்கள்!

கொல்கத்தாவிற்கு வெற்றி இலக்கு 161 ரன்கள்!

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான 15வது டி20 லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயித்த 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதில் ராஜஸ்தான் அணி வீரர் டி ஆர்சி ஷார்ட் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.