Short News

நான் சொல்லும் வரைக்கும் வாயே திறக்கக் கூடாது: ப்ரியா வாரியருக்கு இயக்குனர் உத்தரவு

நான் சொல்லும் வரைக்கும் வாயே திறக்கக் கூடாது: ப்ரியா வாரியருக்கு இயக்குனர் உத்தரவு

நடிகை ப்ரியா வாரியருக்கு இயக்குனர் ஒமர் லூலூ ஒரு கன்டிஷன் போட்டுள்ளாராம்.

ஒமர் லூலூ இயக்கி வரும் ஒரு அடார் லவ் படம் மூலம் நடிகையாகியுள்ளார் ப்ரியா பிரகாஷ் வாரியர். படத்தின் ஒரு பாடல் வீடியோ வெளியாக அதில் ப்ரியா கண் ஜாடை காட்டியதை பார்த்து அனைவரும் இம்பிரஸ் ஆகிவிட்டனர்.

நிர்மலா தேவிக்கு மே 9 வரை நீதிமன்ற காவல்!

நிர்மலா தேவிக்கு மே 9 வரை நீதிமன்ற காவல்!

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளிடம் படுக்கைக்கு அழைக்கும் விதமாக செல்போனில் பேசிய விவகாரத்தில் கைதானார். இதையடுத்து, 5 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவியை சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9 வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார்.
ஹுவாய் பி20 போன்கள் ரிலீஸ்!

ஹுவாய் பி20 போன்கள் ரிலீஸ்!

சமீபத்தில் பார்சிலோனாவில் நடந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமானது ஹுவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன். 6.1. இஞ்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. இதன் விலை ரூ.64,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஹுவாய் பி20 லைட் என்ற ஸ்மார்ட்போனும் வெளியாகிறது.
பாடகியாக அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை!

பாடகியாக அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை!

நடிகர் கார்த்திக் தனது மகன் கவுதமுடன் இணைந்து 'மிஸ்டர் சந்திரமௌலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம், முதன் முறையாக சூர்யாவின் தங்கை பிருந்தா பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை திரு இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் ரெஜினா கசான்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.