Short News

அஜீத்தின் அடுத்த பட இயக்குனர் சிவாவும் இல்ல, விஷ்ணுவும் இல்ல...

அஜீத்தின் அடுத்த பட இயக்குனர் சிவாவும் இல்ல, விஷ்ணுவும் இல்ல...


விசுவாசம் படத்தை அடுத்து அஜீத் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் நடித்தது போதும் தல என்று அஜீத் ரசிகர்கள் விவேகம் படத்தை பார்த்த உடனே கெஞ்சி கூத்தாடினார்கள். ஆனால் அஜீத்தோ மறுபடியும் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார்.

பெண் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ரயில்வே ஸ்டேஷன்!

பெண் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ரயில்வே ஸ்டேஷன்!

குஜராத் மாநிலம் காந்தி நகர் ரயில்வே நிலையத்தில் அனைத்து விதமான பணிகளுக்கும் பெண் அதிகாரிகளே தலைமை தாங்குகின்றனர். டிரைன் டிராக்கிங், சிக்னல் செக்கிங் என எல்லா விதமாக பணிகளுக்கும் பெண் அதிகாரிகளே உள்ளனர். எனவே இந்த ரயில்நிலையம் முழுக்க முழுக்க பெண்களின் கட்டிப்பாட்டில் இயங்கும் தளமாக மாறியுள்ளது.
டிரம்ப் அரசின் வரி சிரமைப்பை விமர்சிக்கும் தொழில் அதிபர்கள்!

டிரம்ப் அரசின் வரி சிரமைப்பை விமர்சிக்கும் தொழில் அதிபர்கள்!

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் புதிய வரி சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றியது.மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனத்தை தெரிவித்த நிலையில், தற்போது பிரபல தொழிலதிபர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமேசான் அதிபர் ஜெஃப் பெஸாஸுக்கு அடுத்தப்படியாக பில்கேட்ஸ் இந்த வரி சீர்த்திருத்தை விமர்சித்துள்ளது அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டவுடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்த மக்களுக்கு போலீஸார் இனிப்புகளை வழங்கினர். வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குழந்தை என்றும் பாராமல் ஹாசினியை கொடூரமாக கொன்ற குற்றத்துக்காக இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்கின்றனர். தஷ்வந்தை நீதிமன்றத வளாகத்திலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர் மீது செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.