Short News

புருவத்தை உயர்த்தி கண்ணடிச்சேன், இயக்குனர் இம்பிரஸ் ஆகிட்டார்: ப்ரியா வாரியர்

புருவத்தை உயர்த்தி கண்ணடிச்சேன், இயக்குனர் இம்பிரஸ் ஆகிட்டார்: ப்ரியா வாரியர்

ஒரு அடார் லவ் பட பாடல் பிரபலம் ப்ரியா வாரியர் அந்த படத்தில் நடிக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார்.

மலையாள சேனலான கைரலி டிவி கடந்த ஆண்டு நடத்திய கோல்டன் பியூட்டி அழகிப் போட்டியில் ப்ரியா பிரகாஷ் வாரியர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

ரூ.15 லட்சம் எங்கே? மோடியின் தில்லாங்கடி வாக்குறுதி!

ரூ.15 லட்சம் எங்கே? மோடியின் தில்லாங்கடி வாக்குறுதி!

கடந்த தேர்தலின் போது, பாஜக வெற்றி பெற்றால் வாக்காளர்கள் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மோடி கூறினார், இந்த பணம் மக்களுக்கு எப்போது கொடுக்கப்படும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோகன் குமார் சர்மா என்பவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம் மறுத்துள்ளது. மேலும் இந்த விஷயம் ''தகவல்'' என்று பட்டியலில் கீழ் வரவில்லை என தெரிவித்துள்ளது
அதிக வலிமையுடன் ட்வின் டிஸ்க் பல்சர் 150!

அதிக வலிமையுடன் ட்வின் டிஸ்க் பல்சர் 150!

இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பஜாஜ் நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் பைக் பல்சர்தான். இதில் புதுப்பொலிவுடன் ட்வின் டிஸ்க் பிரேக் கொண்ட பல்சர் அறிமுகமாகி உள்ளது. இது பைக் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி ஓட்டுபவரின் பாதுகாப்பு அம்சத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. தற்போது வரும் 150 cc பல்சரிலும் பின்புறம் 230 மி.மீ விட்டம் கொண்ட டிஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ரிசர்வ வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு!

இங்கிலாந்து ரிசர்வ வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு!

பேங்க் ஆப் இங்கிலாந்தின் அடுத்த ஆளுநராக ரகுராம் ராஜன் தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த வங்கியின் ஆளுநராக இருக்கும் மார்க் கார்கேவின் பதவி காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய இருக்கும் சூழ்நிலையில் அடுத்த ஆளுநரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆளுநர் பட்டியலில் ரகுராம் ராஜன் பெயர் அதிகம் பரிசிலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.