Short News

அரசு மீது புஷ்பவனம் குப்புசாமி பரபரப்பு புகார்!

அரசு மீது புஷ்பவனம் குப்புசாமி பரபரப்பு புகார்!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இசை கல்லூரியில் எந்த பதவியும் கிடைக்காது என்று பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமிகுற்றம்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் தான் எனக்கு பதவி வழங்கவில்லை ஜெயலலிதா இருந்திருந்தால் என்னுடைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்திருப்பார்" என்று கூறியுள்ளார்.
'குழந்தை' குரல் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி மரணம்!

'குழந்தை' குரல் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி மரணம்!

சென்னையில் வசித்து வந்த பிரபல பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் இன்று . அவருக்கு வயது 87. 1950களில் குழந்தை நட்சத்திரங்களுக்காக பாடல் பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இவர் 'துர்கா' படத்தில் சூப்பர் ஹீட்டான பாப்பா பாடும் பாட்டு என்ற பாடலை பாடியவர். ஓ ரசிக்கும் சீமானே, மியாவ் மியாவ் பூனைக்குட்டி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை படியுள்ளார்
டெல்லி அணிக்கு 11 வது கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்!

டெல்லி அணிக்கு 11 வது கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்!

டி20 லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவி்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. மேலும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், தோல்விகளுக்கு பொறுப்பேற்று, கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். இதனையடுத்து 11 வது புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

காங்கிரஸ் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜ்போரா சவுக் என்ற இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குலாம் நபி பட்டேல் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும், காரில் இருந்த பட்டேலின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தி, முன்னாள், முதல்வர் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.