Short News

பரமேஸ்வரியாக மாறிய காஜல்!

பரமேஸ்வரியாக மாறிய காஜல்!

பாலிவுட் படமான குயீன் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் இந்த படத்திற்கு பாரிஸ் பாரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் கங்கனா ரனாவத் ரோலில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் காஜலின் பெயர் மற்றும் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காஜல் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் பரமேஸ்வரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்த தினகரன்: அடுத்து என்ன?

சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்த தினகரன்: அடுத்து என்ன?

வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மனோகரன் போட்டியிடுவார் என தினகரன் அறிவித்துள்ளார். எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு முட்டையின் மூலம் ஆபத்து வந்திருப்பதாகவும், விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு போகும் எனவும் தினகரன் கூறியுள்ளார்.
காமராஜருக்காக நாம் இதை செய்ய வேண்டும்: கனிமொழி!

காமராஜருக்காக நாம் இதை செய்ய வேண்டும்: கனிமொழி!

கல்விகண் திறந்த கர்மவீரர் என அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே நாம் காமராஜருக்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும் என்றார்.
ரஜினிக்கு துணையாக இருக்கிறோம் - தமிழருவி மணியன்!

ரஜினிக்கு துணையாக இருக்கிறோம் - தமிழருவி மணியன்!

தமிழருவி மணியன் அரசியலில் என்னுடன் இணைய நினைத்தால் மகிழ்ச்சியே என்று ரஜினி தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழருவி மணியன், "ரஜினி தொடங்கும் கட்சியோடு எனது காந்திய மக்கள் இயக்கத்தை இணைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆனால் அவருக்கு எங்கள் இயக்கம் என்றென்றும் துணையாக இருக்கும், தமிழகத்தில் ஊழலற்ற வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகத்தை ரஜினி தருவார்" என்றார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more