Short News

இன்று முதல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி!

இன்று முதல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் தொடக்கத்தின் அடுத்தகட்ட நகர்வுக்குத் தயாராகி வருகிறார். இன்று முதல் 3 நாட்கள் அவர் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளாராம். அவர்களுடன் பல்வேறு ஆலோசனைகள் நடத்திய பிறகு, தன் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார் எனத் தெரிகிறது.
பிரிட்டன் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற இந்தியா முதலீடு!

பிரிட்டன் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற இந்தியா முதலீடு!

பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி,அந்நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 1 பில்லியன் பவுண்டுகள் இந்தியா முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்து இருக்கிறார். இரு நாடுகளுக்கும் மத்தியில் தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட பலபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில், பிரிட்டன் அரசு புதிய இந்தியா-யுகே வர்த்தகக் கூட்டணியை அறிவித்துள்ளது.
தோனி விளையாடுவது சந்தேகம்!

தோனி விளையாடுவது சந்தேகம்!

இன்றைய 17வது டி20 லீக் போட்டியில் சென்னை- ராஜஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் சென்னை அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இதில் கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என சொல்லப்படுகிறது. மேலும், காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் விளையாடத வாட்சன், தற்போது நல்ல பார்மில் இருப்பதால், இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார். ரெய்னாவும் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.
உங்களின் ஆதார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிவது எப்படி!

உங்களின் ஆதார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிவது எப்படி!

ஆதார் விபரங்களின் மீது மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் ஏனெனில் நம் அணைத்து விபரங்களும் அதில்தான் இருக்கிறது. இதில், ஆதார் எண்ணை நாம் எங்கெல்லாம் ஆதார்-ஐ உபயோகப் படுத்தியுள்ளோம் என்று நினைவில் வைக்க வேண்டும். இதற்காக ஆதார் ஆணையமும் ஒரு சிறப்பான சேவை அறிமுகச் செய்துள்ளது, அதுதான் ஆதார் உபயோகித்த வரலாறு (Aadhaar Authentication History).