Short News

வேகமெடுக்கும் ரஜினி: நிர்வாகிகளுக்கு புதிய கட்டளை!

வேகமெடுக்கும் ரஜினி: நிர்வாகிகளுக்கு புதிய கட்டளை!

நாளை முதல் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை வருகிற மூன்று தினங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனையின்போது மக்கள் மன்ற பணிகள், விமர்சனங்களை எதிர்கொள்வது, ஊடங்களை எதிர்கொள்வது உள்ளிட்ட பல விடையங்களில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் அஞ்சலியுடன் விஜய்சேதுபதி!

மீண்டும் அஞ்சலியுடன் விஜய்சேதுபதி!

மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய்சேதுபதி தற்போது மீண்டும் நடிகை அஞ்சலியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யுவன் தயாரிப்பு இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் அஞ்சலி இருவரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். பெயரிடப்படாத இந்த படத்தை தயாரிக்கும் யுவனே, இசையமைக்க இருக்கிறார்.
டி20 லீக்: ராஜஸ்தானுக்கு 168 ரன்கள் வெற்றி இலக்கு!

டி20 லீக்: ராஜஸ்தானுக்கு 168 ரன்கள் வெற்றி இலக்கு!

ஜெய்ப்பூரில் இன்று நடந்து வரும் டி20 லீக் கிரிக்கெட் போட்டியில், முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் 72 ரன்களையும் இஷான் கிஷான் 58 ரன்களையும் குவித்தனர். 168 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தற்போது களமிறங்கியுள்ளது ராஜஸ்தான் அணி. ஸ்கோர்: மும்பை-167/7 (20); ராஜஸ்தான்-6/0 (1)
கடல் சீற்றம் மீனவர்களுக்கு பாதுகாப்பு குடியிருப்பு!

கடல் சீற்றம் மீனவர்களுக்கு பாதுகாப்பு குடியிருப்பு!

கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் குடியிருப்புகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மீனவ குடும்பங்கள் அரசு ஏற்பாடு செய்திருக்கும் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.