Short News

தனுஷுக்காக ஆட்டோ ஓட்டும் மலர் டீச்சர்!

தனுஷுக்காக ஆட்டோ ஓட்டும் மலர் டீச்சர்!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகனின் இயக்கத்தில் மாரி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இதில் சாய் பல்லவி எந்த கேரக்டரில் நடிக்கவுள்ளார் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தநிலையில் தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஆட்டோ டிரைவராக நடிக்கவுள்ளாரம். 
பேக்கர் பாட்டியின் பேங்க் பேலான்ஸ்யை பார்த்து ஷாக்கான போலீஸ்!

பேக்கர் பாட்டியின் பேங்க் பேலான்ஸ்யை பார்த்து ஷாக்கான போலீஸ்!

லெபனான் நாட்டில் சாலையில் மூதாட்டி ஒருவர் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த மூதாட்டியை வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அப்போது மூதாட்டி கைகளில் இருந்த இரண்டு பைகளில் போலீசார் சோதனை செய்த போது லட்சக்கணக்கில் பணம் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
ரஷ்யாவில் இன்டர்வியூ செய்யும் ரோபோ!

ரஷ்யாவில் இன்டர்வியூ செய்யும் ரோபோ!

ரஷ்யாவில் வேரா எனும் ரோபோ நாள் ஒன்றுக்கு 1500 பேரை நேர்காணல் செய்து அசத்தி வருகிறது. வேலைக்கு ஆள் எடுக்கும் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு இந்த ரோபோதான் நேர்காணல் செய்கிறது. தற்போது 200 நிறுவனங்களில் இந்த ரோபோ பணி செய்துவருகிறது. நிறுவனத்துக்கு தேவையான ஊழியர்களை ஆன்லைனில் தேடி எடுத்து அவர்களின் ரெஸ்யூமை ஃபில்டர் செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.
காற்று மாசை தடுக்க கலக்கல் ஐடியா!

காற்று மாசை தடுக்க கலக்கல் ஐடியா!

மீள்தன்மை கொண்டதும், முப்பரிமாண 3டி வடித்தையுடையதுமான ஒரு அமைப்பின் மூலம் காற்று மாசை தடுக்கும் தொழில்நுட்பம் உருவாகப்பட்டுள்ளது. இதனை சவுதியில் இருக்கும் கிங் அப்துல்லா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையின் மூலம் செயற்கையான நுண்தன்மை கொண்ட மாசு பொருள்களை வடிகட்ட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.