Short News

கீர்த்தி சுரேஷ் படத்திற்கு ஜெமினி கணேசன் குடும்பம் எதிர்ப்பு!

கீர்த்தி சுரேஷ் படத்திற்கு ஜெமினி கணேசன் குடும்பம் எதிர்ப்பு!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர்திலகம் படத்திற்கு பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக தனது வாழ்நாளின் கடைசி காலத்தில் நடிகை சாவித்திரி மதுவுக்கு அடிமையாகி தனது உடல் ஆரோக்கியத்தை இழந்ததாகவும், இதற்கு ஜெமினி கணேசன் தான் என சித்தரிப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நூறு ஆண்டுகளாய் எரியும் தீபம்!

நூறு ஆண்டுகளாய் எரியும் தீபம்!

இமாச்சல பிரதேசத்தில் கங்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜுவாலா ஜி ஆலயம். இந்த ஆலயத்தில் இருக்கும் தீபம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து வருகிறது, விஞ்ஞானிகளே வியக்கும்வண்ணம் எரியும் இந்த கோயில் தீபம், விறகு, எண்ணெய் என எந்தவொரு தூண்டு பொருளும் இல்லாமல் எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது இந்தியா புகார்!

வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது இந்தியா புகார்!

இறக்குமதி வரியை உயர்த்திய அமெரிக்காவின் நடவடிக்கை எதிர்த்து தெரிவித்து உலக வர்த்தக அமைப்பில் இந்தியா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட உலகோகங்களின் வரியை அமெரிக்கா உயர்த்தி இருப்பதாகவும், இது பெரும் சரிவுக்கு இட்டுச்சென்றுள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.
காஷ்மீரில் மோடி வருகையால் இன்டர்நெட் சேவை நிறுத்தம்!

காஷ்மீரில் மோடி வருகையால் இன்டர்நெட் சேவை நிறுத்தம்!

நேற்று பிரதமர் மோடி அரசு திட்டத்தை திறந்து வைக்க காஷ்மீர் மாநிலத்திற்கு வருகை தந்தார். அவரது காரணமாக பாதுகாப்புக்காக காஷ்மீர் முழுவதும் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் காஷ்மீரில் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிரதமர் வருகை காரணமாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.