Short News

அழகேசன் படுக்கைக்கு அழைத்தார்- அமலாபால் பகீர்!

அழகேசன் படுக்கைக்கு அழைத்தார்- அமலாபால் பகீர்!

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், டி.நகர் டான்ஸ் ஸ்டூடியோவில் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், என்னை பார்ட்டிக்கு அழைத்தார் அழகேசன், அசிங்கமாக என்னுடன் உரையாடிய அவர் உள்பட விபச்சாரக் கும்பல் தொடர்பான அனைவரது விவரங்களையும் காவல்துறையினர் வெளியிட வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்.
புறாக்களுக்கு கிடைத்த கௌரவம்!

புறாக்களுக்கு கிடைத்த கௌரவம்!

பண்டைய கால காதல் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றிவை புறாக்கள், போர் நேரத்திலும் தனது அஞ்சாத சேவை செய்துள்ளன புறாக்கள். இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் இடையில் 70 வருடங்களுக்கு முன்பு நடந்த போரில் புறாக்களில் பங்கு அபாரம். இதனை மறவாத இஸ்ரேஸ் மக்கள் இன்றுவரை புறாக்களை அன்புகாட்டி வளர்த்து வருகின்றனர். இஸ்ரேல் சுதந்திரத்தை முன்னிட்டு சிறகடிக்கும் வீரர்கள் என புறாக்கள் அழைக்கப்படுகின்றன.
ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப்!

ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப்!

மொஹாலியில் இன்று நடந்த டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது. 194 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய ஹைதராபாத், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்கோர்: பஞ்சாப்-193/3 (20); ஹைதராபாத்-178/4 (20)
புலிக்கு stem cell சிகிச்சை!

புலிக்கு stem cell சிகிச்சை!

நீண்ட காலமாக முதுகு வலியால் அவதிக்கப்பட்டு வந்த 13 வயதான சைபீரியன் புலிக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியில் இருக்கும் வனவிலங்கு பூங்காவில் இருக்கும் இந்த புலி, கடந்த வாரம் தனது இருப்பிடத்தில் சுருண்டு விழுந்தது. இதனைத்தொடர்ந்து புலிக்கு ஸ்டெம் செல் மூலம் சிறப்பு சிகிச்சை அளித்துள்ளனர் மருத்துவர்கள்.