Short News

ஸ்ரீதேவிக்கு எதுக்கு தேசிய விருது: பிரபல இயக்குனர் எதிர்ப்பு!

ஸ்ரீதேவிக்கு எதுக்கு தேசிய விருது: பிரபல இயக்குனர் எதிர்ப்பு!

தேசிய விருது தேர்வுக் குழு தலைவராக பிரபல பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர் தலைமையிலான குழு 65வது தேசிய விருது பட்டியலை தயார் செய்து சமீபத்தில் அறிவித்தது. இதில், மாம் படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அளிக்க சேகர் கபூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 7.10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-28; கோயம்புத்தூர்-25; திருச்சி-29; திருநெல்வேலி-27; திண்டுக்கல்-25; ஈரோடு-27; சேலம்-29; சிவகாசி-26; தஞ்சாவூர்-28; தூத்துக்குடி-27; திருப்பூர்-26; வேலூர்-27; ஊட்டி-15; கொடைக்கானல்-15; ஏற்காடு-22; ஏலகிரி-25; வேடந்தாங்கல்-28.
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, சித்திரை 13; பிறை: வளர்பிறை; திதி: ஏகாதசி திதி காலை 10.04 வரை பிறகு துவாதசி; நட்சத்திரம்: பூர நட்சத்திரம் பிற்பகல் 3 வரை பிறகு உத்திரம்; யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3 வரை, பிறகு மரணயோகம்; சூலம்: தெற்கு; ராகுகாலம்: பகல் 01:30 முதல் 03:00 வரை; எமகண்டம்: காலை 06:00 முதல் 07:30 வரை; நல்ல நேரம்: காலை 09:00-12:00; மாலை 04:00-07:00
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலையிலும் வறண்ட வெப்பமே நிலவியது. காலை 7 மணிக்கு 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்றும் நன்றாகவே வெயில் வெளுக்கும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:51, மறைவு: மாலை 06:23; சந்திர உதயம்: மாலை 3:19, மறைவு: அதிகாலை 3:53.