Short News

நினைத்ததை சாதித்த அரை நிர்வாண நடிகை!

நினைத்ததை சாதித்த அரை நிர்வாண நடிகை!

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி தெலுங்கு திரையுலகை அதிர வைத்தார். மேலும் ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு குவிந்தது. இதையடுத்து, அவர் மீதான தடையை மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் நீக்கியுள்ளது.
4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!

4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் 51 பந்துகளுக்கு 84 ரன்கள் குவித்தார். சென்னையின் தீபக் சாஹர் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஒரு மேடன் ஓவரையும் வீசினார்.
பெங்களூருவில் எஸ்.வி.சேகர்: கைது எப்போது!

பெங்களூருவில் எஸ்.வி.சேகர்: கைது எப்போது!

பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக தவறான பதிவை இட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கைக்கு பயந்து எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ள பேட்டியில் தான் தலைமறைவாகவில்லை என்றும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூருக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தாக்குதல் -  இந்தியா கண்டனம்!

ஆப்கானிஸ்தான் தாக்குதல் - இந்தியா கண்டனம்!

ஆப்கானிஸ்தானின் காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், " தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினற்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை உட்பட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயார் எனவும்" குறிப்பிடப்பட்டுள்ளது.