Short News

தமன்னாவை கோடியில் நனைத்த குமாரசாமி!

தமன்னாவை கோடியில் நனைத்த குமாரசாமி!

கர்நாடகாவில் யார் முதல்வர் என எடியூரப்பாவுக்கும், குமாரசாமிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், குமாரசாமி குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. குமாரசாமி தனது மகன் நிகில் கௌடாவை வைத்து ஜாகுவார் என்ற படத்தை தயாரித்தார். . இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடிய நடிகை தம்மன்னாவுக்கு ரூ. 2கோடி சம்பளமாக வழங்கியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.  
முகப்பொலிவு தரும் கற்றாழை!

முகப்பொலிவு தரும் கற்றாழை!

ஹீமோ குளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு கற்றாழை அருமருந்து. முக்கியமாக இதை அருந்துவதால் முக அழகு பொலிவு பெறும். கற்றாழை ஜெல் தினமும் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். மேலும், சோற்றுக்கற்றாழை சாறு குடிப்பதால், உயர் ரத்த அழுத்தம் குறையும் ஜீரண சக்தி அதிகரிக்கும், வயிற்று சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.
உயிருக்கு உலை வைக்கும் உப்பு!

உயிருக்கு உலை வைக்கும் உப்பு!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். ஆனால் அதே உப்புதான் நம் உயிருக்கும் உலை வைக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நம் உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவு 4 மிகிராமைத் தாண்டினால் பல்வேறு நோய்கள் ஏற்படுபமாம். குறைந்த அளவு உப்பு சாப்பிட்டால் நம் ஆயுள் கூடும். முடிந்தவரை ஊறுகாய்களை தவிர்க்கவும். 
மும்பை அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி!

மும்பை அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்துள்ளது. வழக்கம்போல அந்த அணியில் இருந்து ரிஷத் பண்ட் 44 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். விஜய சங்கர் 30 பந்துகளுக்கு 43 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் குர்னால் பாண்டியா, பும்ரா, மார்கண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.