Short News

திரைப்படமாகும் குகையில் சிறுவர்கள் சிக்கிய சம்பவம்!

திரைப்படமாகும் குகையில் சிறுவர்கள் சிக்கிய சம்பவம்!

தாய்லாந்தில் உள்ள ஒரு மலைகுகையில் சாகசப் பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்கள் மாட்டிக்கொண்டனர். 9 நாள் போராட்டத்திற்கு பிறகு பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் ரூ. 400 கோடி செலவில் ஹாலிவுட் படமாக்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
இது எல்லாம் ஜனநாயக நாடா?.. கொந்தளித்த சீமான்!

இது எல்லாம் ஜனநாயக நாடா?.. கொந்தளித்த சீமான்!

8 வழிச்சாலைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்ட சீமான் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சிறை வளாகத்தல் பேசிய சீமான் ட்டு வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம். எட்டு வழிச் சாலைபற்றிப் பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், 8 வழிச்சாலை போன்ற ஒப்பந்தங்களின் மூலம் பணத்தை குவிக்க பார்க்கிறார்கள் எனவும் அவர் பேசியுள்ளார். 
நம்பிக்கையில்லா தீர்மானம்: லோக்சபாவில் இன்று நோ லஞ்ச்-பிரேக்!

நம்பிக்கையில்லா தீர்மானம்: லோக்சபாவில் இன்று நோ லஞ்ச்-பிரேக்!

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. இத்தீர்மானத்தைக் கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சியின் ஜெயதேவ் கல்லா விவாதத்தைத் தொடங்கி வைத்து, பா.ஜ.க. அரசு மீது அடுக்கடுக்காகக் குற்றங்களை சுமத்தி வருகிறார். இதற்கிடையே, விவாதங்கள் நடைபெறுவதால் இன்று மக்களவையில் உணவு இடைவேளை கிடையாதாம்!
மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி!

மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி!

மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து 42 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அவர் கிட்டத்தட்ட 84 நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்காக விமான பராமரிப்புச் செலவுக்கு மட்டும் ரூ.1088.42 கோடி செலவிடப்பட்டுள்ளது என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதை தவிர தனியார் விமானங்களுக்கு வாடகை ரூ. 387.26 கோடி, ஹாட்லைன் தொடர்புக்காக ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more