Short News

பிரபுதேவா இயக்கத்தில் 'தல59'!

பிரபுதேவா இயக்கத்தில் 'தல59'!

தமிழ் சினிமாவில் தனகென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் அஜித். இவர் 4 முறையாக சிறுத்தை சிவா கூட்டணி அமைத்து விசுவாசம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், விசுவாசம் படத்தையடுத்து அவர் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி அணிக்கு 11 வது கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்!

டெல்லி அணிக்கு 11 வது கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்!

டி20 லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவி்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. மேலும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், தோல்விகளுக்கு பொறுப்பேற்று, கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். இதனையடுத்து 11 வது புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

காங்கிரஸ் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜ்போரா சவுக் என்ற இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குலாம் நபி பட்டேல் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும், காரில் இருந்த பட்டேலின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தி, முன்னாள், முதல்வர் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன்!

மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன்!

சென்னை, வியாசர்பாடியில் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் ஜாபர் என்ற நபர் நேற்றிரவு தூங்கி கொண்டிருந்த தனது மனைவியின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் உடலை கைப்பற்றியை போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்