Short News

'வடசென்னை-1' ட்ரைலர் ரிலீஸ்!

'வடசென்னை-1' ட்ரைலர் ரிலீஸ்!

வெற்றி மாறன் இயக்கத்தில் 3வது முறையாக தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாகம் ட்ரைலர் ஜூலை 28 தேதி வெளியிடப்படும் என்று நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
புதிய பட்ஜெட் எஸ்யூவியை களமிறக்கும் ஜீப் காம்பஸ்!

புதிய பட்ஜெட் எஸ்யூவியை களமிறக்கும் ஜீப் காம்பஸ்!

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்நிறுவனம் இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்று ரெனிகேட் எஸ்யூவி என்றும் மற்றொன்று காம்பேக்ட் எஸ்யூவி என்றும் தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸ்- இளைஞர் பலி!

சென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸ்- இளைஞர் பலி!

சென்னை அண்ணா சாலையில் இன்று பைக் ரேஸில் ஈடுபட்டபோது ஸ்பென்சர் பிளாசா அருகே சாலைத்தடுப்பில் பைக் மோதி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இளைஞர் காசிமேடு பகுதியை சேர்ந்த விக்ரம் என தெரியவந்துள்ளது. இந்த பைக் ரேஸில் 7 பேர் கொண்ட கும்பல நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்றாயனிடம் இங்கிலீஷில் பேசி கலாய்த்த கமல்!

சென்றாயனிடம் இங்கிலீஷில் பேசி கலாய்த்த கமல்!

தற்போது படுமொக்கையக போய் கொண்டிருக்கும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் கமல், காமெடி நடிகர் சென்றாயனைக் கலாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதில் சென்றாயனிடம் ஆங்கிலத்தில் பேசும் கமல், பின், 'நான் பேசுவதே புரியவில்லை என்றால் நீங்கள் பேசுவது எப்படி நமது மக்களுக்குப் புரியும்?' எனக் கேட்டுள்ளார். இதைக்கேட்ட சக போட்டியாளர்கள் அனைவரும் சென்றாயனை பார்த்து சிரிக்கின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more