Short News

சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த கிஃப்ட்!

சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த கிஃப்ட்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கடந்த 15ஆம் தேதி தன் பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி கிரிக்கெட் பேட் ஒன்றை அவருக்குப் பரிசளித்துள்ளார் நடிகர் விஜய். 'SaNa' எனக் குறிப்பிட்டு, அதன் கீழே 'ஹேப்பி பர்த்டே நண்பா' என எழுதி தன் கையெழுத்திட்டு அந்த பேட்டை பரிசளித்துள்ளார் விஜய். இத்தகவலை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் லபாத்தில் சுமார் 49.20 சதவீத லாபத்தில் சரிவடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், இந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் புதிய க்ரூஸர் மாடல் பைக்கை செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பைக் யுஎம் ட்யூட்டி 230 என்ற பெயரில் வெளியாகிறது. தற்போது 4 க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களையும், ஒரு மின்சார மாடலையும் யுஎம் நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த விழா ஓபிஎஸ்-க்கு ரொம்ப முக்கியமா?

இந்த விழா ஓபிஎஸ்-க்கு ரொம்ப முக்கியமா?

சென்னை நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர்கள் ராஜேந்தி பாலாஜி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். ஆனால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு அமைச்சர் கூட எட்டிப்பார்க்காத நிலையில் ஓபிஎஸ்,அமைச்சர்கள் பூப்புனித விழாவில் பங்கேற்றிருப்பது தமிழர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.