Short News

இது ஜாக்குலின் லவ் ஸ்டோரி: ரொம்ப மோசம்!!

இது ஜாக்குலின் லவ் ஸ்டோரி: ரொம்ப மோசம்!!

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் டி.வி கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலின் அளித்த பேட்டியில், "நான் இன்னும் சிங்களாதான் இருக்கே, லவ்வுக்கும் எனக்கு ரொம்ப தூரம், எனக்கூறி அவருடைய ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். " ஸ்கூல் படிக்கும் போது, லவ்னா என்னான்னு சரியா தெரியாது, அப்ப. லவ் பண்ணியிட்டு இருந்தேன், பின்னடி இது லவ்னு தெரியுற சமயத்தில், என் லவ் ப்ரேக்-அப் ஆயிடுச்சு சார்" என்றார்.
அமெரிக்கா செல்லும் தல, தளபதி!

அமெரிக்கா செல்லும் தல, தளபதி!

நடிகர் விஜய் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்டம் முடிந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விசுவாசம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அமெரிக்காவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
உருவானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி!

உருவானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி!

நேபாளத்தில் இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என உருவாகியுள்ளது. இதில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்- சென்டர் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றது. தற்போது, இந்த கூட்டணி ஒன்றாக இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
நாசாவுக்கு 6 வயது சிறுமி எழுதிய கடிதம்!

நாசாவுக்கு 6 வயது சிறுமி எழுதிய கடிதம்!

நாசாவுக்கு கடிதம் எழுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் அந்த 6 வயது சிறுமி. புளூட்டோவை மீண்டும் கோள் என்று அறிவியுங்கள் என அந்த சிறுமி நாசாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நாசா நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய சுவாரஸ்யங்களை கொண்டிருப்பதுதான் புளூட்டோ என கூறியுள்ளது.