Short News

திருடனை துரத்தி பிடித்த விஜயகாந்த்!

திருடனை துரத்தி பிடித்த விஜயகாந்த்!

விஜயகாந்த் திரைத்துறையில் 40 ஆண்டுகள் ஆனதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட சத்யராஜ், விஜயகாந்த் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில்,மனோரமா வீட்டுக்கு சென்று விட்டு வரும்போது ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் நடக்கிறது, உடனே வண்டியிலிருந்து இறங்கி ஓடிப்போய் அவரை பிடித்தார் விஜயகாந்த். அவர் ஒரு ரியல் ஹீரோ என கூறியுள்ளார். 
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 7.10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-28; கோயம்புத்தூர்-25; திருச்சி-29; திருநெல்வேலி-27; திண்டுக்கல்-25; ஈரோடு-27; சேலம்-29; சிவகாசி-26; தஞ்சாவூர்-28; தூத்துக்குடி-27; திருப்பூர்-26; வேலூர்-27; ஊட்டி-15; கொடைக்கானல்-15; ஏற்காடு-22; ஏலகிரி-25; வேடந்தாங்கல்-28.
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, சித்திரை 13; பிறை: வளர்பிறை; திதி: ஏகாதசி திதி காலை 10.04 வரை பிறகு துவாதசி; நட்சத்திரம்: பூர நட்சத்திரம் பிற்பகல் 3 வரை பிறகு உத்திரம்; யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3 வரை, பிறகு மரணயோகம்; சூலம்: தெற்கு; ராகுகாலம்: பகல் 01:30 முதல் 03:00 வரை; எமகண்டம்: காலை 06:00 முதல் 07:30 வரை; நல்ல நேரம்: காலை 09:00-12:00; மாலை 04:00-07:00
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலையிலும் வறண்ட வெப்பமே நிலவியது. காலை 7 மணிக்கு 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்றும் நன்றாகவே வெயில் வெளுக்கும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:51, மறைவு: மாலை 06:23; சந்திர உதயம்: மாலை 3:19, மறைவு: அதிகாலை 3:53.