Short News

மகனுக்காக வரிந்து கட்டிய நடிகைக்கு பதிலடி கொடுத்த விஷால் டீம்!

மகனுக்காக வரிந்து கட்டிய நடிகைக்கு பதிலடி கொடுத்த விஷால் டீம்!

நடிகை ஜெயசித்ராவின் மகன் அமரேஷ், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. கடந்த 11ம் தேதி வெள்ளிக்கிழமை படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஆண்டனி பட விழாவில் நடிகை ஜெயசித்ரா புகார் தெரிவித்தார். இதற்கு விஷால் தரப்பு மேடையிலேயே பதிலடி தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
இனி பிளாஸ்டிக் வீடுதான்: லண்டனின் ஒலித்த எச்சரிக்கை மணி!

இனி பிளாஸ்டிக் வீடுதான்: லண்டனின் ஒலித்த எச்சரிக்கை மணி!

லண்டன் நகரில் இருக்கும் பிரபல உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல்வேறு பகுதிகளில் குப்பையில் வீசப்பட்ட 12 ஆயிரம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிகளை பயன்படுத்தி ஒரு வீடு அமைக்கப்பட்டிருந்தது. வரும்காலத்தில் இனி இதில் தான் வாழ வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரிமோட்டை பயன்படுத்தி ஏசி காற்று வாங்கிய குரங்கு கைது!

ரிமோட்டை பயன்படுத்தி ஏசி காற்று வாங்கிய குரங்கு கைது!

மும்பை நகரில் இருக்கும் கல்யாண் நகரின் அடுக்கமாடி குடியிருப்பில் புகுந்த குறும்புக்கார குரங்கு ஒன்று அங்கு வசிக்கும் மக்களை கடந்த 17 நாட்களாக தூங்கவிடாமல் செய்துள்ளது. வீட்டில் நுழைந்து ஏசி ரிமோட்டை பயன்படுத்தி குளு குளு காற்று வாங்குவது என குரங்கின் சேட்டை நீண்டுள்ளது. புகாரின் பேரில் ஒருவழியாக குரங்கை வனத்துறையினர் பிடித்தனர்.
பயணிகள் திருடிய ரயில்வேத்துறைக்கு சொந்தமான பொருட்கள்!

பயணிகள் திருடிய ரயில்வேத்துறைக்கு சொந்தமான பொருட்கள்!

ரயில்வேத்துறைக்கு சொந்தமான பொருட்களை திருடிய 5 ஆயிரத்தி 239 பயணிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 3 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கழிப்பறை கோப்பை, கண்ணாடி, தண்ணீர் பைப், படுக்கை துணி உள்ளிட்டவை திருடப்பட்ட பொருட்கள் ஆகும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more