Short News

"எனக்கும் டப்பிங் பேச ஆசைதான், ஆனால்...!"

"எனக்கும் டப்பிங் பேச ஆசைதான், ஆனால்...!"

இதுவரை 47 படங்களில் நடித்தும் இதுவரை எந்தப் படத்திற்கும் அனுஷ்கா தனக்குத் தானே டப்பிங் பேசியதில்லை. இதற்கு விளக்கமளித்துள்ள அவர், "எனக்கும் என் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச ஆசையாகத்தான் உள்ளது. ஆனால், என் தோற்றத்தை விட என் குரல் குழந்தை போல் இருக்கும். ஆகவே நானே டப்பிங் பேசினால் காமெடியாகி விடும். அதனால்தான் நான் டப்பிங் கொடுப்பதில்லை" என்றார்.
மகள் வயது பெண்ணை முறைப்படி திருமணம் செய்த நடிகர்!

மகள் வயது பெண்ணை முறைப்படி திருமணம் செய்த நடிகர்!

பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், தனது மகள் வயது இளம்பெண்ணை இன்று முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார்.52 வயதாகும் அவருக்கு கவுஹாத்தியைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் இன்று மும்பை அலிபாக்கில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாவணி அணிய விரும்பும் அர்ஜுன் ரெட்டி கதாநாயகி!

தாவணி அணிய விரும்பும் அர்ஜுன் ரெட்டி கதாநாயகி!

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இந்நிலையில் தமிழில் ஜிவி.பிரகாஷ் மற்றும் ஜீவாவுடன் இணைந்து நடித்து வரும் ஷாலினி பாண்டே கிராம கதாப்பாத்திரத்தில் பாவாடை, தாவணி அணிந்து நடிக்க ஆசையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கிராம பெண் கதாப்பாதிரத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியாக ரங்கஸ்தளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  
நிர்மலா தேவியால் ஆசிரியர் சமுதாயத்திற்கே தலைகுணிவு

நிர்மலா தேவியால் ஆசிரியர் சமுதாயத்திற்கே தலைகுணிவு

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தமிழகத்தை புரட்டு போட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ. "பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம், ஆசிரியர் சமுதாயத்திற்கே தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது" என்றார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் 28-ம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.