Short News

மீண்டும் ஒரு வங்கி மோசடி.. யூகோ வங்கியால் மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் ஒரு வங்கி மோசடி.. யூகோ வங்கியால் மக்கள் அதிர்ச்சி..!

நாட்டின் முன்னணி வங்கிகளின் ஒன்றான யூகோ வங்கியில் சுமார் 621 கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் மோசடி நடந்துள்ளது, இதன் மூலம் வங்கிக்கு சுமார் 737 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த வங்கி மோசடியில் முக்கியக் குற்றவாளியாக யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் கவுல் மீது சிபிஐ அறிவித்துள்ளது.

பாடி பில்டர் போஸில் மாஸ்டர் மகேந்திரன்!

பாடி பில்டர் போஸில் மாஸ்டர் மகேந்திரன்!

'நாட்டாமை' உள்ளிட்ட பல படங்களில் சிறுவனாக நடித்த மாஸ்டர் மகேந்திரன், 'விழா' படம் மூலம் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பெரிய பாடி பில்டர் போல் தன் உடம்பை முறுக்கேற்றி வைத்துள்ளார். அவர் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் இந்தப் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் ஆர்யா. மாஸ்டர் மகேந்திரனுக்கு தற்போது 27 வயது ஆகிறது.
திருச்செந்தூர் கடலில் தடை: பக்தர்கள் ஏமாற்றம்!

திருச்செந்தூர் கடலில் தடை: பக்தர்கள் ஏமாற்றம்!

வெப்பச் சலனம் மற்றும் கால நிலை மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழக கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என்றும், இதனால் கடலில் அலைகளில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருச்செந்தூர் கடலில் குளிப்பதற்கும், கால் நனைப்பதற்கும், கடற்கரையில் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு நிச்சயம்!

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு நிச்சயம்!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சீரழிப்போருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.