Short News

8.40 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன்.. மோசமான நிலையில் இந்திய வங்கிகள்..!

8.40 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன்.. மோசமான நிலையில் இந்திய வங்கிகள்..!

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் வாயிலாக மார்ச் காலாண்டில் மட்டும் வராக்கடன் அளவு சுமார் 8,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் மொத்த வங்கி துறையும் அதிர்ச்சியுள்ளது. மேலும் இதன் பாதிப்புத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மிகப்பெரியதாக வெடிக்கும் எனவும் தெரிகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளின் மொத்த வராக்கடன் அளவு டிசம்பர் மாத முடிவில் 8,40,958 கோடி ரூபாயாகவும், இதில் சேவை மற்றும் விவசாயத்

தஞ்சையில் கோலாகலத் தேரோட்டம்!

தஞ்சையில் கோலாகலத் தேரோட்டம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளில் தேர் பவனி வந்து கொண்டிருக்கிறது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேரோட்டத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
இன்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

இன்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 407 கன அடியிலிருந்து 315 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 35.27 அடி; நீர் இருப்பு 9.78 டி.எம்.சி. ஆகும். குடி நீர் தேவைக்காக அணையிலிருந்து நொடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால்தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
வில்லியர்ஸ் சிக்ஸர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ராயுடு, தோனி!

வில்லியர்ஸ் சிக்ஸர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ராயுடு, தோனி!

பெங்களூருவில் நேற்று நடந்த டி20 லீக் கிரிக்கெட் போட்டியில், பெங்களூர் அணியை நசுக்கித் தள்ளியது சென்னை அணி. பெங்களூரின் ஏபி டி வில்லியர்ஸ் வெளுத்த 8 சிக்ஸர்களைக் கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போனாராம் சென்னை கேப்டன் மஹேந்திர சிங் தோனி. ஆனாலும், அசராமல் தோனி 7 சிக்ஸர்களையும், அவருக்குத் துணையாக அம்பதி ராயுடு 8 சிக்ஸர்களையும் பறக்க விட்டு சென்னையை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.