Short News

எல்.ஐ.சி பாலிசிகளில் உங்கள் முகவரியை மாற்றுவது எப்படி?

எல்.ஐ.சி பாலிசிகளில் உங்கள் முகவரியை மாற்றுவது எப்படி?

நம்மில் பலர் எல்ஐசி பாலிசிகளை வாங்கியிருக்கலாம். பாலிசிகளை வாங்கும் போது நீங்கள் கொடுத்திருந்த முகவரி தற்போது மாறியிருக்கலாம். அவ்வாறு மாறியிருக்கும்போது மாறிய விவரங்களை எல்.ஐ.சி-க்குத் தெரிவிப்பது மிக முக்கியமானதாகும். உங்களது முகவரி, மொபைல் எண் மற்றும் உங்கள் மின்னஞ்சல் போன்ற தொடர்பு விவரங்களை உங்கள் பாலிசியுடன் எல்.ஐ.சி-யுடன் சிறந்த சேவையைப் பெற வழி வகுக்கும்.

ஆளுநர் நடிகர், பிரதமர் இயக்குநர்- டி.ராஜேந்தர்!

ஆளுநர் நடிகர், பிரதமர் இயக்குநர்- டி.ராஜேந்தர்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் டி.ராஜேந்தர், "தற்போதைய அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல், ஆளுநர் ஒரு நடிகர், அவரை இயக்குபவர் பிரதமர்" என்று சரமாரியாக விளாசியுள்ளார். மேலும், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கியது திமுக-காங்கிரஸ் ஆட்சிதான் என்றும் கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
நடிகைகள் சம்மத்துடன் தான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறதாம்!...

நடிகைகள் சம்மத்துடன் தான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறதாம்!...

தற்போது சினிமாவில் நடைபெறும பாலியல் சம்பவங்கள் குறித்து நடிகைகள் வெளிப்படுத்தி வருகிறன்றனர். இந்நிலையில், பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனராக இருக்கும் சரோஜ்கான் இதுகுறித்து ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில் பாலிவுட்டில் நடிகைகள் சம்மத்துடன் தான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது என கூறியுள்ளார். 
சென்னை வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

சென்னை வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூருவில் நடந்து வரும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 68 ரன்களும், டிகாக் 53 ரன்கள் எடுத்தனர்.