Short News

ராஜஸ்தான் பூமிக்குக் கீழ் 11.48 கோடி டன் தங்கம்!

ராஜஸ்தான் பூமிக்குக் கீழ் 11.48 கோடி டன் தங்கம்!

ராஜஸ்தானின் உதய்பூர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 300 அடி ஆழத்தில் 11.48 கோடி டன் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை இந்தியப் புவியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, ராஜஸ்தானின் மற்ற பகுதிகளிலும் தங்கத்தைத் தேடி சுரங்கம் தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஐஎப்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: திண்டுக்கல் கார்த்திகாயினி சாதனை!

ஐஎப்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: திண்டுக்கல் கார்த்திகாயினி சாதனை!

இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சற்றுமுன் வெளியிட்டது. இந்த தேர்வு முடிவுகள் http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அளவில் நடைபெற்ற ஐஎப்எஸ் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகாயினி 12ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
தமிழ் ரசிகர்களே எனது இலக்கு: முத்த நாயகி பளிச்!

தமிழ் ரசிகர்களே எனது இலக்கு: முத்த நாயகி பளிச்!

தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிக்க வேண்டும்  என்பதே  தற்போதைக்கான தனது  இலக்கு என அர்ஜூன் ரெட்டி பட நாயகி ஷாலினி  பாண்டே தெரிவித்துள்ளார். அர்ஜூன் ரெட்டி பட  வெற்றியை தொடர்ந்து  ஜீவாவுக்கு ஜோடியாக  கொரில்லா என்ற  படத்தில் அவர் தற்போது நடித்து  வருகிறார்.
ஆரியாவின் ’எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஏமாற்று வேலையா!

ஆரியாவின் ’எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஏமாற்று வேலையா!

திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்த காரணத்தால் தமிழ் சினிமா பிரபலங்கள் ரியால்டி தொடருக்கு தாவி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆரியா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற புதிய தொடரை நடத்த இருக்கிறார். இது தமிழ் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் இளம்பெண்ணை நடிகர் ஆரியா உண்மையிலேயே திருமணம் செய்து கொள்வாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.