Short News

கிரிமினல் முதல்வர்களில் தேவேந்திர பட்னாவிஸ் நம்பர் 1!

கிரிமினல் முதல்வர்களில் தேவேந்திர பட்னாவிஸ் நம்பர் 1!

ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்தியாவில் உள்ள இந்தியாவின் 31 மாநில முதல்வர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் 11 மாநிலத்தின் முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் பாஜகவை சேர்ந்த மகாராட்டிரா மாநில முதல்வர் முதலிடம் பெற்றுள்ளார். அவர் மீது 22 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  
கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் குழுவில் ஐபிஎஸ் அதிகாரி (ஓய்வு) மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

புதிய கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதை கவுரவமாக கருதுகிறேன் என்று கமலின் 'மக்கள் நீதி மய்ய' அரசியல் பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஜனநாயகத்தை கமல் காப்பார் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.
இனிமேல் தான் விஸ்வரூபம் ஆரம்பம்- கமல்!

இனிமேல் தான் விஸ்வரூபம் ஆரம்பம்- கமல்!

மதுரையில் நடைபெற்ற தனது 'மக்கள் நீதி மய்ய' அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "அநீதிகளை கண்டு காத்திருக்க முடியாமல் களம் இறங்கியுள்ளோம், நான் உங்கள் தலைவன் அல்ல, தொண்டன், மக்கள் கஷ்டத்தை பார்த்து இனிமேல் தான் எடுக்கப்போகிறேன் விஸ்வரூபம்", என்று அதிரடியாக பேசினார்.