Short News

யார் கூப்பிட்டும் வரவில்லை.. அம்மா இறந்தது தெரியாமல் அருகிலேயே படுத்து இருந்த சிறுவன்

யார் கூப்பிட்டும் வரவில்லை.. அம்மா இறந்தது தெரியாமல் அருகிலேயே படுத்து இருந்த சிறுவன்

இந்தச் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்து இருக்கிறது. கத்தேதான் என்ற பகுதியை சேர்ந்த சமீனா சுல்தானா என்ற பெண் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து உள்ளார். இவர் மரணம் அடைந்தது தெரியாமல் அவரது மகன் அருகிலேயே படுத்து கிடந்துள்ளான். சோயப் என்ற அந்தச் சிறுவனுக்கு 5 வயது மட்டுமே நிரம்பி இருக்கிறது. தற்போது அவன் தாயின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வோடாஃபோன் போட்டியாகப் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.2000 கேஷ்பேக் அளிக்கும் ஏர்டெல்

வோடாஃபோன் போட்டியாகப் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.2000 கேஷ்பேக் அளிக்கும் ஏர்டெல்

இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நெட்வொர்க்கான ஏர்டெல் மோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 2,000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவித்துள்ளது.இதே போன்று வோடாஃபோன் நிறுவனம் சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 1,500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகளைக் கடந்த சில வாரங்களாக வழங்கி வருகிறது.

மீண்டது ஏர்செல்: நிம்மதி மூச்சு விடும் பயனாளர்கள்!

மீண்டது ஏர்செல்: நிம்மதி மூச்சு விடும் பயனாளர்கள்!

கடந்த 3 நாட்களாக  ஏர்செல் சேவைகள் முடங்கியதால்  வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதியடைந்தனர்.  இந்த நிலையில், ஏர்செல் சேவைகள் தற்போது சீரடைந்துள்ளதாகத் தெரிகிறது.  தங்களுக்கு அழைப்புகள் வழக்கம்போல்  வரத் தொடங்கியுள்ளதாக  ஏர்செல் வாடிக்கையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.9 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,921 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,368 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,670க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.50 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.