Short News

கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி 7 வயது சிறுவன் சாதனை!

கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி 7 வயது சிறுவன் சாதனை!

ஐதராபாத்தைச் சேர்ந்த 7 வயது சமான்யு போத்துராஜ். இவர், 5,895 அடி உயரத்தில், ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி தேசியக் கொடியை நாட்டி சாதனை படைத்துள்ளான். கிளிமாஞ்சாரோவில் டிரக்கிங் செய்தது சவாலாக இருந்தது. இந்தாலும் எனக்கு க்கு பனி என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் கிளிமாஞ்சாரோ மலையில் ஏறினேன் என சிறுவன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டபேரவை வேட்புமனு தாக்கல் நிறைவு!

கர்நாடக சட்டபேரவை வேட்புமனு தாக்கல் நிறைவு!

கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியுடன் கர்நாடக சட்டமன்ற வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மேலும், ஏப்ரல் 25ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் எனவும் ஏப்ரல் 27ம் தேதி, வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பால் டிரிக்: பாதுகாப்பான பார்க்கிங்!

பால் டிரிக்: பாதுகாப்பான பார்க்கிங்!

காரை சரியாக ஷெட்டில் பார்க் செய்வது புதிதாக கார் ஓட்ட தொடங்கி இருப்பவர்களுக்கு சிரமமான ஒன்று. அவர்களுக்கு ஒரு எளிய வழி. டென்னிஸ் பாலை துளையிட்டு உங்களது லேஸ் அல்லது பெரிய கயிற்றில் இணைத்து பார்க் செய்ய விரும்பும் இடத்தின் எல்லை பகுதியில் கட்டிவிடுங்கள். பின்னர் அடுத்த முறை பார்க் செய்யும்போது உங்கள் காரின் பின் கண்ணாடியில் பால் படும்போது காரை ஆஃப் செய்து விடலாம்.
பயணத்தின் கதைகள்: பலாவான் தீவு!

பயணத்தின் கதைகள்: பலாவான் தீவு!

பில்லிபைன்ஸ் நாட்டில் இருக்கும் பலாவான் தீவு தெளிவான நீர் மற்றும் உறுதியான மலைகளால் ஆனது. மனிதர்கள் அதிகம் செல்லாத தீவுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கு சின்ன சின்ன மலைகள் அதிகம் காணப்படுகின்றன. புகைப்பட நயம் உள்ளவர்களுக்கு இந்த தீவு சொர்க பூமியாக இருக்கும், காரணம் இயற்கையின் வண்ணத்தை தன்னுள் தாங்கி இருக்கிறது பலாவான்.