Short News

ஐதராபாத்தில் மனதை உருக்கும் ஒரு சம்பவம்!

ஐதராபாத்தில் மனதை உருக்கும் ஒரு சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சமீனா சுல்தானா. இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சமீனா உயிரிழந்துள்ளார். அப்போது சமீனாவின் 5 வயது மகன் தனது தாய் உயிரிழந்தது தெரியாமலேயே சமீனாவின் உடலை கட்டிப்பிடித்தப்படி படுத்து தூங்கியுள்ளான். இதனைக்கண்ட அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.  
சில்லறை கடனில் 25% வளர்ச்சி!

சில்லறை கடனில் 25% வளர்ச்சி!

இந்திய பெருநிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறையும் அதே நேரத்தில், பிப்ரவரி மாதம் சில்லறை கடன் 25% வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி என்பது கிரெடிட் கார்ட், பிடிமானமில்லா கடன்கள் போன்ற சிறு கடன்களால் நிகழும். இதில் பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் வங்கிகளின் கடன் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
ப்ரோக்கொலியின் பலன்கள்!

ப்ரோக்கொலியின் பலன்கள்!

பச்சை நிற ப்ரோக்கொலி பல வகைகளில் உடலுக்கு நன்மையை அளிக்க வல்லது. ப்ரோக்கொலியை தொடர்ந்து சாப்பிட்டு வருவது புற்றுநோய், ரத்த அழுத்தம், சரும பிரச்சனை உள்ளிட்ட வகைகளுக்கு தீர்வாக அமையும் என மருத்துவர்கள் கூறிகிறார்கள். மேலும் கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ப்ரோக்கொலியை சாப்பிட்டு வந்தால் பார்வையில் தெளிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
காளி' படத்தின் ரிலீஸ் தேதி!

காளி' படத்தின் ரிலீஸ் தேதி!

கிருத்திகா ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி உள்ளிட்ட 5 கதாநாயகிகள் நடித்துள்ள 'காளி'. படத்தை பாத்திமா விஜய் ஆன்டனி தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்தை விஜய் ஆன்டனியே இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாரான நிலையில், சினிமா ஸ்ட்ரைக் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது, தற்போது வரும் மே 18ம் தேதி 'காளி'. படத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.