Short News

ஃபேஸ்புக்கில் தற்கொலை நேரடி ஒளிப்பரப்பு!

ஃபேஸ்புக்கில் தற்கொலை நேரடி ஒளிப்பரப்பு!

ராணுவத்தில் சேரமுடியாத விரக்தியில் ஆக்ராவை சேர்ந்த முன்னா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் தற்கொலை செய்து கொள்வதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முன்னா நேரலையாக ஒளிபரப்பியதால், இச்சம்பவம் ஆக்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகிறது. இதையடுத்து, முன்னாவின் சடலத்தைக் கைப்பற்றி ஆக்ரா போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபார உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

அபார உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் 3ஆவது நாளான இன்றும் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 202.45 புள்ளிகள் உயர்ந்து 36,722.41 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 52.15 புள்ளிகள் அதிகரித்து 11,060.20 புள்ளிகளாக இருந்தது.
தற்கொலை செய்த பிரியங்கா 'வம்சம்' சீரியலில் நடித்தவர்!

தற்கொலை செய்த பிரியங்கா 'வம்சம்' சீரியலில் நடித்தவர்!

சன் டி.வி.யில் ஒளிபரப்பான 'வம்சம்' தொடரில் நடித்த பிரியங்கா, திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தொடரில் ஜோதிகா என்ற பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் பிரியங்கா. திருமணமாகி சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்த இவர், குடும்பத் தகராறு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. டி.வி. நடிகைகள் அடிக்கடி தற்கொலையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைவு!

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைவு!

கர்நாடகா அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட அதிக அளவு தண்ணீரால், ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1.10 லட்சம் கன அடியிலிருந்து 1.07 லட்சம் கன அடியாகக் குறைந்துள்ளது. ஆனாலும், தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை தொடர்கிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more