Short News

ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னைக்கும் வருமா?

ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னைக்கும் வருமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவும், ஒடிசாவிலிருந்து தெற்கு நோக்கி கடற்காற்று வீசுவதாலும் ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாக்.வீரர் பஹர் ஜமான் உலக சாதனை!

பாக்.வீரர் பஹர் ஜமான் உலக சாதனை!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஃபஹர் ஜமான், 37 ரன்கள் கடந்த நிலையில், 1000 ரன்கள எட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில், 1000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இவர் 18 போட்டிகளில் இந்த சாதனையை  நிகழ்த்தியுள்ளார்.முன்னதாக ரிச்சர்ஸ்ட், டிகாக் 21 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்துள்ளனர்
சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் 2ம் இடம்!

சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் 2ம் இடம்!

இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. பொது விவகார மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் அதிக மக்கள் தொகையில் கூட, இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த பட்டியலில் சிறந்த ஆட்சி தரும் மாநிலமாக கேரளா பெயர் எடுத்து இருக்கிறது. 
உயிர் போகும் நிலையிலும் 43 பேரின் உயிர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர்!

உயிர் போகும் நிலையிலும் 43 பேரின் உயிர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர்!

கேரள மாநிலத்தில் கோட்டயடத்தை சேர்ந்த டிரைவர் மது நேற்றிரவு கோட்டயத்திலிருந்து மலப்புரத்திற்கு 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றார். பஸ்ஸில் மதுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே சுதாரித்து கொண்ட மது ஹேண்ட பிரக்கை பிடித்தவாறு பஸ்ஸை நிறுத்தி விட்டு உயிரிழந்தார். உயிர் போகும் நிலையிலும் மது 43 பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார்.   
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more