Short News

ஆந்திராவில் பந்த்: திருப்பதி-திருமலை பஸ்கள் மட்டும் இயக்கம்!

ஆந்திராவில் பந்த்: திருப்பதி-திருமலை பஸ்கள் மட்டும் இயக்கம்!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது. மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திரா முழுவதும் சுமார் 12,000 பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். திருப்பதியிலிருந்து திருமலைக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

நோடூலோசிஸ்டிக் அக்னே என்று சொல்லப்படுகிற இவை மிகவும் கடுமையானவை.எண்ணெய் மற்றும் இறந்த செல்கள், முகத்தின் சிறு துவாரங்களிலோ, மயிர்ப்புடைப்பின் மீதோ ஆழமாகப் படியும் போது இவை தோன்றுகின்றன. ஹார்மோன்கள் சீராக செயல்படாமல் இருக்கும்போது, எல்லா வயதிலும் பருக்கள் தோன்றுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது சாதாரணமான பருக்கள் தோன்றி மறைவது வழக்கம்.

இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

ஆந்திராவை தமிழகம் போல மாற்ற பாஜக முயற்சி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 12 மணிநேரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பின்னர் பேசிய அவர் மாநில உரிமைகளில் சமரசத்திற்கு இடமில்லை எனக் கூறினார்.
டி20 லீக் சூதாட்டம்: நொய்டாவில் தொடங்கிய கைது நடவடிக்கை!

டி20 லீக் சூதாட்டம்: நொய்டாவில் தொடங்கிய கைது நடவடிக்கை!

ராஜஸ்தான், சென்னை அணிக்கு எதிரான போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நொய்டாவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 21 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.