Short News

”காங்கிரஸ் எம்.எல்.ஏவை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுகிறது பாஜக!”

”காங்கிரஸ் எம்.எல்.ஏவை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுகிறது பாஜக!”

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் சிங்கை அமலாத்துறை மூலம் பாஜக அரசு மிரட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனக்கு கீழ் செயல்பட்டு வரும் விசாரணை அமைப்புகளை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக கூறிய அவர் நாட்டின் நலன் கருதியே காங்கிரஸ் கட்சியுன் கைகோர்த்ததாக குமாரசாமி கூறியுள்ளார்.
கமலால் நான்  நஷ்டமடைந்தேன்- விவேக் பரபர பேச்சு!

கமலால் நான் நஷ்டமடைந்தேன்- விவேக் பரபர பேச்சு!

வி.பி.விஜி இயக்கி நடிகர் விவேக் நடித்துள்ள 'எழுமின்' படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விவேக், 'பாலக்காட்டு மாதவன்' படம்  நஷ்டமடைந்ததற்கு காரணம், என் படம் ரிலீஸாகும் போது ஒரு பெரிய நடிகரின் படம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்தனர்" என்றார். அன்றைய நாளில் கமலின் 'பாபநாசம்' படம் ரிலீஸானது பற்றிதான் விவேக் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
தங்கச் சுரங்கம் யாருக்கு சொந்தம்: மோதிக்கொள்ளும் சீனா, இந்தியா!

தங்கச் சுரங்கம் யாருக்கு சொந்தம்: மோதிக்கொள்ளும் சீனா, இந்தியா!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் சர்வதேச எல்லை பகுதியில் இருக்கும் தங்க சுரங்கத்தை சீனா அத்துமீறி விரிவுபடுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இருக்கும் என கருதப்படும் சுரங்கம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது. சுரங்கத்தை விரிவுப்படுத்தும் பணியில் சீனாவின் சுரங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளல் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது.
காவிரி வரவில்லை என்றால் பாஜக காரணம், வந்தால்..!

காவிரி வரவில்லை என்றால் பாஜக காரணம், வந்தால்..!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "காவிரி வரவில்லை என்றால் அதற்கு காரணம் மத்திய அரசு என்கிறார்கள், ஆனால் காவிரி வந்துவிட்டால் அதற்கு காரணம் உச்சநீதிமன்றம் என்கிறார்கள், காவிரிக்காக கர்நாடக முதல்வராக பதவி ஏற்பின் போது குமாரசாமி கருப்பு சட்டை அணிந்து வர வேண்டும், என்றார்.