Short News

பெயர் மாற்றி காவிரி வரைவுத் திட்டம் தாக்கல்!

பெயர் மாற்றி காவிரி வரைவுத் திட்டம் தாக்கல்!

காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவுதிட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சற்றுமுன் தாக்கல் செய்தது. இதில், காவிரி அமைப்புக்கு ஆணையம் என்று பெயர் மாற்றி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது. நாளை வழங்காவிட்டால் வரும் 22, 23 தேதிகளில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் அளித்துள்ளது.
தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ,  திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ, திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி சென்னை மெரினாவில் குவிந்த இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுக்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் பேரணி நடத்திய வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பேரணி காரணமாக நேப்பியார் பாலம், பாரதிசாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை தோல்வியை தழுவியதை அடுத்து, ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய தகுதி இழந்தது. இதையடுத்து, டீ 20 லீக் தொடரில் இருந்து மும்பை வெளியேறியது. இது மும்பை ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!

11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வழக்கம்போல அந்த அணியில் இருந்து ரிஷத் பண்ட் 44 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். விஜய சங்கர் 30 பந்துகளுக்கு 43 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் ஹர்ஷல் படேல், சந்தீப், அமித் மிஸ்ரா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.