Short News

கடந்த 2 ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி இரு மடங்காக உயர்வு!

கடந்த 2 ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி இரு மடங்காக உயர்வு!

கடந்த 2 ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி இரு மடங்காக உயர்ந்துள்ளது என மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் என்.எல்.சி.யின் செயல்திறன் சாதனை நிலையை எட்டியுள்ளது. என்.எல்.சி. நிர்வாகத்தின் உற்பத்தியால் ரயில்வே நிர்வாகம் தேசிய அளவில் அதிக பயன் அடைந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆவடியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை : கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு

ஆவடியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை : கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னையை அடுத்த ஆவடியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடுத்த ஆவடி,கோனம்பேடு பகுதியில் பல்சர் பாலு என்கிற கோபால் வசித்துவந்தார். இவர் போரூரில் உள்ள செல்போன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு பவித்ரா என்கிற பெண்ணுடன் திருமணமாகி, ஒரு மகள் இருக்கிறார்.

வீணாகிப் போன பும்ராவில் அசத்தல் கேட்ச்!

வீணாகிப் போன பும்ராவில் அசத்தல் கேட்ச்!

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா ஒரு அருமையான கேட்சைப் பிடித்தார். ஆனால், அதற்கு அவுட் கொடுப்பதற்குப் பதிலாக, தென் ஆஃப்ரிக்க வீரர் டேவிட் மில்லருக்கு சிக்ஸர் கொடுக்கப்பட்டது. பும்ரா பந்தைத் தொடுவதற்கு முன்பே பவுண்டரி லைனைத் தொட்டதுதான் காரணமாம்!
தனது உண்மையான அப்பா யார் என்று தெரியாத பிரபலங்கள்!

தனது உண்மையான அப்பா யார் என்று தெரியாத பிரபலங்கள்!

அப்பா இல்லாத மகன் என்பது வேறு, தனது அப்பாவே யார் என்று தெரியாத மகன் என்று குறிப்பிடப்படுவது வேறு. இப்படியான சூழலில் வளரும் குழந்தைகள் தங்கள் வாழ்வில் மிகுந்த மனவருத்தத்திற்குரிய சூழல்களை, தருணங்களை கடந்து வந்திருப்பார்கள். 

இதிலும், ஒற்றை ஆளாக அம்மாவால் மட்டுமே வளர்க்கப்பட்டு கடைசி வரை அப்பா யார் என்று அறியாமல் இருப்பது மிகவும் கொடுமையான விஷயம்.