Short News

"புருவ புயல்" பிரியா வாரியருக்கு எதிராக புகார்... இஸ்லாமிய அமைப்பு ஹைதராபாத்தில் மனு!

"புருவ புயல்" பிரியா வாரியருக்கு எதிராக புகார்... இஸ்லாமிய அமைப்பு ஹைதராபாத்தில் மனு!

2 நிமிடங்கள் மட்டுமே வரும் புருவ அசைவுகளை வைத்து உலகையே கட்டிப்போட்டுள்ள மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக ஹைதராபாத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.

தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கம் இன்று காலை விலையை விட மாலையில் கிராமுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.2,998 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,984 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,470க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.10 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பாஜக உறுப்பினர் அலுவலகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை!

பாஜக உறுப்பினர் அலுவலகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை!

பாஜக கட்சியை சேர்ந்த வினித் கோயங்கா நடத்தும் மும்பை அலுவலகம் ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை நடத்தி இருக்கிறது. அந்த அலுவலகத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் முறையாக லைசன்ஸ் வாங்கியதா என்பதை சோதிக்க இப்படி செய்து இருக்கிறார்கள்.  இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய செயலாளர் ராஜிவ் சௌதி பாஜக கட்சியிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். 
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று மாலை 3.15 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-36; மதுரை-39; கோயம்புத்தூர்-37; திருச்சி-39; திருநெல்வேலி-41; திண்டுக்கல்-42; ஈரோடு-42; சேலம்-42; சிவகாசி-41; தஞ்சாவூர்-43; தூத்துக்குடி-39; திருப்பூர்-41; வேலூர்-43; ஊட்டி-19; கொடைக்கானல்-25; ஏற்காடு-38; ஏலகிரி-41; வேடந்தாங்கல்-41.