Short News

கர்நாடகா ஆளுநரை கண்டித்து நாடு முழுவதும் காங். போராட்டம்!

கர்நாடகா ஆளுநரை கண்டித்து நாடு முழுவதும் காங். போராட்டம்!

கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக ஆளுநரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதனை கண்டித்து காங்கிரஸ் நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கடிதம் மாநில கமிட்டிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மூளைச்சாவு நிலை ஏற்படும் பின்னர் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிபா வைரஸ் காய்ச்சலால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-தெளிவு; ரிஷபம்-களிப்பு; மிதுனம்-சினம்; கடகம்-அசதி; சிம்மம்-பரிவு; கன்னி-பாசம்; துலாம்-நிறைவு; விருச்சிகம்-வரவு; தனுசு-லாபம்; மகரம்-நலம்; கும்பம்-பக்தி; மீனம்-மறதி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்!
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, வைகாசி 7; பிறை: வளர்பிறை; திதி: சப்தமி திதி மறுநாள் பின்னிரவு 2.27 வரை பிறகு அஷ்டமி; நட்சத்திரம்: ஆயில்ய நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 1.26 வரை அதன் பிறகு மகம்; யோகம்: சித்தயோகம்; சூலம்: கிழக்கு; ராகுகாலம்: மாலை 04:30 முதல் 06:00 வரை; எமகண்டம்: மதியம் 12:00 முதல் 01:30 வரை; நல்ல நேரம்: காலை 6.30 - 7.30; மாலை 4.30 - 5.30