Short News

மோடியின் பெயர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை!

மோடியின் பெயர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை!

மோடியின் பெயரை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என கோவா மாநில கமிட்டி சார்பில் கின்னஸ் உலக சாதனை அமைப்புக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கடந்த 4 ஆண்டுகளில் 41 பயணத்திட்டங்களில் 52 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனை சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் மாலை அல்லது இரவில் இடி மேகங்கள் உருவாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
ஃபேஸ்புக் தயாரிக்கும் சாட்டிலைட்!

ஃபேஸ்புக் தயாரிக்கும் சாட்டிலைட்!

உலகம் முழுவதும் சீரான இணையதள சேவையை வழங்க ஒரு செயற்கைக்கோளைத் தயாரித்து வருகிறதாம் பிரபல சமூகவலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக். Athena என்ற பெயரில் உருவாகி வரும் இந்த செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களை ஃபேஸ்புக்கும் உறுதி செய்துள்ளது.
உங்கள் கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்...

உங்கள் கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்...

உங்கள் கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்...
நம்மில் அதிக பேர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே ஏதோ வேண்டா வெறுப்பாக செய்கின்றோம். தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால் அது உங்கள் கிட்னியை பெரிதும் பாதிக்கும். கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்கள் ஜீரண மண்டலம் பாதிப்படைந்த, உணவு சாப்பிட முடியாத அளவிற்கு பல உடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும். அத்தோடு உயிரையும் கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more