Short News

கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ செலவு எவ்வளவு?

கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ செலவு எவ்வளவு?

கர்நாடகாவில் 104 இடங்களில் வெற்றி பெற்றும் பாஜக கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் திண்டாடி வருகிறது.இந்நிலையில், எம்எல்ஏ-க்களை அவர்களது வீடுகளில் இருந்தால் பாஜகவினர் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கிவிடுவார்கள் என்ற நிலையில் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்கள் மைசூர் செல்லும் வழியில் உள்ள ஈகல்டன் ரிசார்ட்-ல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மொத்தம் சுமார் 50 கோடி வரை காங்கிரஸ் செலவு செய்யப்போகிறதாம்.
வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

சிலி கடற்படை தினம் இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்1859 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.1904 - பாரீசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது1991 - இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்த தினம் 1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.  
ஆப்பிள் மியூசிக்கை மிரள வைத்த யூடியூப்!

ஆப்பிள் மியூசிக்கை மிரள வைத்த யூடியூப்!

வரும் 22ம் தேதி புதிய மியூசிக் சேவை ஒன்றை அறிமுகம் செய்யவிருக்கிறது யூடியூப் நிறுவனம். ஆப்பிள் மியூசிக் சேவை போன்றவற்றை பின்னுக்குத் தள்ள இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முதற்கட்டமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மெக்ஸிகோ மற்றும் தென்கொரிய நாடுகளில் வரும் என்று தெரிகிறது. மாதக்கட்டணமாக 10 டாலர்கள் வரை வசூலிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 
ஆழ்ந்து தூங்கும்போது நம்ம உயிர் எங்க போகுது தெரியுமா!...

ஆழ்ந்து தூங்கும்போது நம்ம உயிர் எங்க போகுது தெரியுமா!...

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது யாரையும் எழுப்பக்கூடாது என்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அதற்கு காரணம் பல ஆயிரம் கிமீ வேகத்தில் நம் உயிர் உடலிலிருந்து வெளியே சென்று மீண்டும் திரும்புவதனால்தானாம் என்று ஆத்ம சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படி தூக்கத்தில் இருந்து ஒருவரை எழுப்பினால் அவர் மனநலம் பாதிக்ககூட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.