Short News

ஈகல்டன் ரெசாட்டில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!

ஈகல்டன் ரெசாட்டில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!

பெங்களூருக்கு வெளியே இருக்கும் ஈகல்டன் ரெசாட்டில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், குதிரைபேரம் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தக்கவைக்க முயன்று வருகிறது.
அகதிகளுடன் செல்ஃபி எடுத்த நடிகை பிரியங்காவுக்கு எதிர்ப்பு!

அகதிகளுடன் செல்ஃபி எடுத்த நடிகை பிரியங்காவுக்கு எதிர்ப்பு!

சமீபத்தில் வங்கதேசம் சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது ரோஹிங்யாக்களை சந்தித்து, அவர்களுடன் செல்ஃபி எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் சொந்த நாட்டில் இருக்கும் ரோஹிங்யாக்களை சந்திக்காமல் அகதிகளுடன் செல்ஃபி எடுத்து, தனக்கு விளம்பரத்தை ஏற்படுத்திக்கொண்டார் பிரியங்கா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
கடன் வழங்குவது குறித்து ஹெச்.டி.எப்.சி அதிரடி அறிவிப்பு!

கடன் வழங்குவது குறித்து ஹெச்.டி.எப்.சி அதிரடி அறிவிப்பு!

மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை வைத்து வருபவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும் என பிரபல ஹெச்.டி.எப்.சி வங்கி அறிவித்துள்ளது. மேலும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் பாதி கடனாக வழங்கப்படும் என அறிவித்துள்ள ஹெச்.டி.எப்.சி. இதற்கான வட்டிவிகிதம் 11 விழுக்காடாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கியா செராட்டோ காரின் சோதனை ஓட்டம்!

கியா செராட்டோ காரின் சோதனை ஓட்டம்!

தென்கொரியாவை சேர்ந்த பிரபல கியா மோட்டார்ஸ் நிறுவனம் மிட்சைஸ் செடான் ரகத்தில் புதிய செராட்டோ காரை இந்தியாவில் அறிமுகம் திட்டமிட்டுள்ளது. இதில், கியா செடான் கார் தற்போது பெங்களூரில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களுக்கு இந்த மாடல் போட்டியாக இருக்கும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more