Short News

காங். எம்.எல்.ஏக்கள் 2 பேரை அபேஸ் செய்த பாஜக!

காங். எம்.எல்.ஏக்கள் 2 பேரை அபேஸ் செய்த பாஜக!

பல சர்ச்சைகளுக்கு மத்தியில், பெரும்பான்மை இல்லாமல் 104 சட்டமன்ற உறுப்பினர்களின் துணையோடு கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், பிரதாப் கவுடா, ஆனந்த்சிங் ஆகிய 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் மேலும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எம்எல்ஏக்களை காங்கிரஸ் தலைவர்களால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறுகின்றனர்.
மூலநோய் வருவதற்கான காரணங்கள்!

மூலநோய் வருவதற்கான காரணங்கள்!

நாள்பட்ட மலச்சிக்கல், அதிகப்படியாக மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, ஒரே இடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்து இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மூலநோய் வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நீண்ட நேரம் ஒரே இடத்திலை அமர்வதையும், நல்ல உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதன் வழியாக மூலநோய் வராமல் தடுக்க முடியும்.
கட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்: நட்டி கலகல ட்விட்!

கட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்: நட்டி கலகல ட்விட்!

நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் இப்பாடல் குறித்து ட்விட் செய்துள்ளார். அதில், கட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்.. இல்ல கட்டிணவனுக்கு கை குடுக்கணும் என பதிவிட்டுள்ளார். 
தனக்கும், முதல்வருக்குமான உறவு மிகவும் கெட்டியாக உள்ளது-ஓபிஎஸ்!

தனக்கும், முதல்வருக்குமான உறவு மிகவும் கெட்டியாக உள்ளது-ஓபிஎஸ்!

தனக்கும், முதல்வருக்குமான ஒற்றுமை மிகவும் கெட்டியாக உள்ளது என்று மதுரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தங்களது ஆட்சிக்கும், கட்சிக்குமான தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது, அதனால் அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.