Short News

கர்நாடகாவுக்கு என தனியாக சட்டம் இல்லை-கொந்தளித்த செல்லகுமார்!

கர்நாடகாவுக்கு என தனியாக சட்டம் இல்லை-கொந்தளித்த செல்லகுமார்!

தனிப்பெரும் கட்சியான பாஜகவை கர்நாடகாவில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்திருப்பது இந்தியாவின் பல மாநிலங்களில் எதிரொலித்து வருகிறது. இதில் கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் செல்லகுமார்,"அரசியல் சாசனத்தில் கர்நாடகாவுக்கு தனியாக சட்டம் இல்லை, ஆளுநர் நாளை காலை 11.30 வரை எங்களுக்கு நேரம் கொடுத்துள்ளார், எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்" என்றார்.
அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

டாடா நிறுவனத்தின் அடுத்த படைப்பான டாட எச்5எக்ஸ் எஸ்யூவி காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களால்பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் நவம்பர் மாதத்தில் டாட எச்5எக்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.12 லட்சமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் தொல்லையை துணிச்சலாக எதிர்கொண்ட பிரபல நடிகை!

பாலியல் தொல்லையை துணிச்சலாக எதிர்கொண்ட பிரபல நடிகை!

விருது விழாவில் தன்னிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனக்கு பாடம் புகட்டியுள்ளார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 10, 15 பாதுகாவலர்களுடன் செல்லும் நடிகைகள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.
வெற்றியுடன் பைனலுக்கு சென்று கெத்துக்காட்டிய சென்னை!

வெற்றியுடன் பைனலுக்கு சென்று கெத்துக்காட்டிய சென்னை!

டி-20 போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பையில் உள்ள வாங்ஹே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 139 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவரில் திரில் வெற்றி பெற்றது.