Short News

பெங்களூரு வானில் 'திக்திக்'... 2 இண்டிகோ விமானங்கள் மோதல் தவிர்ப்பு!

பெங்களூரு வானில் 'திக்திக்'... 2 இண்டிகோ விமானங்கள் மோதல் தவிர்ப்பு!

கடந்த 10ஆம் தேதி பெங்களூரு வானில் 2 இண்டிகோ விமானங்கள் மோதவிருந்த சம்பவம் தவிர்க்கப்பட்டது. கோவை-பெங்களூரு விமானமும், பெங்களூரு-கொச்சி விமானமும் கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் பறந்து கொண்டிருந்ததை நவீன தொழில்நுட்பமான டி.சி.ஏ.எஸ். அமைப்பு கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஒரு விமானம் 200 அடிக்குக் கீழ் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை முதல் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018!

நாளை முதல் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018!

இங்கிலாந்தில் மக்கள் கவனிக்கத் தவறிய, ஆனால் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டிய பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 தொடர் நாளை தொடங்குகிறது. லண்டனில் தொடங்கவுள்ள இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. இந்திய அணி சார்பாக, ராணி ராம்பால் தலைமையில் இளம் படை இத்தொடரில் பங்கேற்கின்றது.
இவ்வார ராசி பலன்கள் (20- முதல் 26-07-2018 வரை)

இவ்வார ராசி பலன்கள் (20- முதல் 26-07-2018 வரை)

கிரகங்களின் ராசி மாற்றம்: சூரியன் - மாற்றமில்லை; செவ்வாய் - மாற்றமில்லை; புதன் - மாற்றமில்லை; குரு - மாற்றமில்லை; சுக்கிரன் - மாற்றமில்லை; சனி - மாற்றமில்லை; ராகு-கேது - மாற்றமில்லை; சந்திரன்: 21ஆம் தேதி அதிகாலை 04:16க்கு விருச்சிக ராசிக்கு மாற்றம்; 24ஆம் தேதி பிற்பகல் 03:28க்கு தனுசு ராசிக்கு மாற்றம்; 26ஆம் தேதி அதிகாலை 04:12க்கு மகர ராசிக்கு மாற்றம்.
நீலகிரியில் தொடர் மழை: 2 தாலுகா பள்ளிகளுக்கு இன்று லீவ்!

நீலகிரியில் தொடர் மழை: 2 தாலுகா பள்ளிகளுக்கு இன்று லீவ்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more