Short News

ஹிமாச்சலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் சம்பா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
நயன்தாரா படம் ட்ராப்: ரசிகர்கள் ஷாக்!

நயன்தாரா படம் ட்ராப்: ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நயன்தாரா தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் குற்றம் 23 இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருந்தார். இந்நிலையில், அந்த படம் ட்ராப்பாகிவிட்டதாக இயக்குனர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.  
திருநங்கை என்பதால் ஆசிரியர் பணி மறுப்பு!

திருநங்கை என்பதால் ஆசிரியர் பணி மறுப்பு!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த சுசித்திரா கடந்தாண்டு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறினார். திருநங்கை சுசித்திராவிற்கு அவரது பாலியல் அடையாளத்தால் தொடர்ந்து ஆசிரியர் பணி மறுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். தனக்கு ஆசிரியர் பணி வழங்கிட மேற்கு வங்க அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என திருநங்கை சுசித்திரா தே கோரிக்கை விடுத்துள்ளார்.
சில்மிஷம் செய்த போலீஸை வெளுத்து வாங்கிய பெண்!

சில்மிஷம் செய்த போலீஸை வெளுத்து வாங்கிய பெண்!

டெல்லியில் மங்கோல்பூரி என்ற இடத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் பொதுமக்கள் மத்தியில் அந்த போலீஸை வெளுத்து வாங்கியுள்ளார். சம்பத்தின் போது போலீஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more