Short News

உத்தரகாண்ட்டில் நிலநடுக்கம்!

உத்தரகாண்ட்டில் நிலநடுக்கம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்திரகாசியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
காய்ச்சலின் போது சாப்பிடும் பழங்கள்!

காய்ச்சலின் போது சாப்பிடும் பழங்கள்!

காய்ச்சலை கட்டு படுத்த கொய்யா பழத்தை தினமும் சாப்பிடலாம். கொய்யப்பழம் டெங்கு காய்ச்சலால் உடலில் சேரும் நச்சு தன்மையை நீக்கி, கொழுப்புகளை வெளியேற்றும். உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், தலை சுத்தல் போன்றவை குணப்படுத்த ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். உடலில் இருக்கும் நச்சு தன்மையை வெளியேற்ற தேவையான நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து ஆரோக்கியத்தை கொடுக்கும்.  
ஐடி ஊழியர்களுக்கான ஒரு டிப்ஸ்!

ஐடி ஊழியர்களுக்கான ஒரு டிப்ஸ்!

இந்தியாவில் ஐடி துறையில் ஏராளமான இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் பல மணி நேரம் கணிணியின் முன்பு வேலை செய்வதால் அவர்களின் கண்கள் விரைவில் பாதிக்கின்றது. அவ்வாறு அதிகமாக கணிணியை அதிகம் உபயோகிப்பவர்கள் கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரினால் கழுவினால் கண்கள் பாதுகாக்கப்படும். 
விருது வழங்கும் விழாவுக்கு வராத நயன், விஜய் சேதுபதிக்கு நன்றி!

விருது வழங்கும் விழாவுக்கு வராத நயன், விஜய் சேதுபதிக்கு நன்றி!

திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் நடிகர் சங்கத்திற்கு நன்கொடை தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஃபிலிம்பேர் விகுது விழாவை புறக்கணித்த நயன்தாரா, விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களிலும் இதை மற்ற கலைஞர்களும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more